உன் நினைவோடு வாழ்வதற்கும்
சிறு வித்யாசம்தான்..........
உன்னோடு வாழ்ந்தால் வரம்
உன் நினைவோடு வாழ்தல்தவம்.
அடிபட்டு விழுந்த பறவையென
துடிதுடிக்கிறது என் சிறகுகள்.
எவ்வித சலனமின்றிகாற்றோடு
பயணிக்கிறது உன் சிறகுகள்.
கடும் கோடையிலும்
ஈரமாகத்தானிருக்கிறது
என் தலைமுடி பற்றி
இழுத்தணைத்து நீ
தந்த ஒற்றைமுத்தம்
நீ பிரிந்த நாளில்
எனக்கென்று ஒரு
பிரபஞ்சம் உருவானது..
அங்கே என்னைத் தவிர
யாருமில்லை.
வேட்டை நாயின்
வாயில் சிக்கிய முயலாய்
இரவு என்னைக்
கவ்விக்கொள்கிறது
உதிரமென வடிகிறது
கண்ணீர்.
(தோழியின் படைப்பு)