Friday, March 20, 2009

என்னவளே!!!!!!!!!!!

எனக்குள் உன்னை எழுதியவளே!
என் தவமும் நீ தான் !
என் வரமும் நீ தான்!
நுழைகிறேன் நினைவாக உன்னுள்,
பிறப்பாயா நிஜமாக என்னுள்!

நீ சிரிக்கும் போதெல்லாம் சிதைக்கிறேன் காற்றாக உன்னோடு கலப்பதற்கு !
நீ பார்க்கும் போதெல்லாம் மலர்கிறேன் பூவாக உன் கூந்தல் தொடுவதற்கு!
நீ பேசும் போதெல்லாம் மறக்கிறேன் என்னை உன்னை சுவாசிப்பதற்கு!
உன் பிம்பங்களின் வருடலிலாவது வாழ நினைக்கிறேன் இடம் கொடு அன்பே!
(தோழியின் படைப்பு )

Friday, March 13, 2009

பிரிய மனம் இல்லாத இதயம்

வளர்த்துவந்த பிரியங்களை வீதியில் வீசிவிட்டு
முகமில்லாமல் திரும்பிச் செல்கிறாய்...

புள்ளியென மறைந்துவிட்ட பின்னரும்
உன் கையசைப்புக்காக காத்திருக்கிறது
பழக்கப்பட்ட இதயம்

பிரிந்திருந்த பொழுதுகளைவிட
பிரிகின்ற பொழுதின் கனம்
அதிகமானதாகவே இருக்கிறது எப்போதும்.

வீடு நோக்கி நடக்கின்றன உணர்வற்ற என் கால்கள்.


(தோழியின் படைப்பு)

Thursday, March 12, 2009

காத்திருப்பேன்

என் நினைவலைகள்
உன் இதையத்தை கரைக்கும் வரை காத்திருப்பேன் !
என் கனவலைகள்
உன் தவத்தை கலைக்கும் வரை காத்திருப்பேன் !
என் சுவாசத்தின் நேசம்
உன் சுவாசத்தில் கலக்கும் வரை காத்திருப்பேன் !
என் உயிர் ஓசையில்
உன் பதில் ஒலிக்கும் வரை காத்திருப்பேன் !
நான் உனக்குள் உறைய காத்திருக்கிறேன் !!!!!!!!!!!

(தோழியின் படைப்பு)

Tuesday, March 10, 2009

உன் காதலை பெற்ற மறுநொடி

உன் காதல்பெற்ற மறுநொடி உயரப்பறந்தேன்
உன்காதல் இழந்த மறுநொடி சிறகிழந்து விழுந்தேன்
சிறகிழந்த பறவை நான் வாட, இறகென்றே
என் காதலை உதிர்த்து பறந்தாய் நீ
என்னைத் தேடி நீ வருவாய் என்றே காத்திருந்தேன்
மண்ணைத்தேடி வர மறந்த மழையாய் நீ
காரணங்கள் இன்றி பிரிவும் இல்லை
ரணங்கள் இன்றி காதலும் இல்லை
சோகங்கள் இன்றி காவியம் இல்லை
மேகங்கள் இன்றி வானமும் இல்லை
வாசல் தேடி நீ வரும் நாள் வாழ்க்கையற்று போவேனோ?
காதல் தேடி நீ வரும் நேரம் கற்சிலையாய் மாறிடுவேனோ?
வரம் கேட்ட என் நெஞ்சுக்கு வரமென்ன பிரிதலா?
புறம் சென்ற உன் நெஞ்சுக்கு ஈரமில்லை ஏனடா?
என் மெளனம் தின்றே உயிர்வாழ்கிறாய்
உன் மெளனம் கண்டே உயிர்வேகிறேன்...
கனவில் கூட நீ என்னை பிரிவதேன்?
கவிதையில் கண்ணீராய நான் கரைவதேன்?
ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் எப்போதும் தளிர்த்திருக்கும்,
மழை காணும் ஆவலில் இந்தப்பூ எப்போதும் விழித்திருக்கும்..


(தோழியின் படைப்பு)



Sunday, March 8, 2009

உறவுகள்

"நல்ல வாட்ச் ஒண்ணு வாங்கிட்டு வா மாப்ளே" என்பான் தோழன்.

"நமக்கு ஒரு கேமரா போதும் தம்பி" என்பார் பக்கத்துவீட்டு அண்ணன்.

"ரிமோட் கண்ட்ரோல் ஏரோப்ளேன் வேணும் மாமா" என்பான் அக்காள் மகன்.


எல்லோர் முன்பும் வெளிநாட்டில் வசிப்பது பெருமையாக எண்ணும் வேளையில்..

எல்லோரும் எல்லாமும் கேட்டுச் சென்றபின் அருகில் வந்து

உள்ளங்கை பற்றி மெதுவாய் சொல்லும் மனைவியின்

"அடிக்கடி போன் பண்ணுங்க உங்க குரல் கேட்கணும்" என்கிற வாக்கியத்தில்

மறைந்து போகும் பெருமையும் வெளிநாட்டின் வசதிகளும்!!!!

(தோழியின் படைப்பு )

Wednesday, March 4, 2009

காதலன்

நீ பிரியும் தருணத்தில் வழியனுப்ப மனமில்லாமல்

பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் நான் தவித்து நின்றேன்

கன்னம் நனைக்கும் கண்ணீருடன் நீ சொன்னாய்

"உனக்கு வர்ற மனைவி கொடுத்துவச்சவடா" என்று.

உன் பிரிவை விட அதிகமாய் வலிக்கிறது உன் வாழ்த்து.

என்னை விட்டுப் போகின்ற கடைசி நாளில்

நீ அழாமல் போகவேண்டும் என்று துடிக்கிறது மனசு.

என் பிரிவெண்ணி அழாமல் போய்விடுவாயோ

என்றும் தவிக்கிறது அதே மனசு

முரண்பட்ட நினைவுகளில் சிக்கித் தவிக்கிறது

உன் மீதான் என் உயிருள்ள காதல்

எத்தனை முறை காதலை கொடுத்த இறைவனுக்கு

நன்றி சொல்லியிருப்போம்

நம்மைப் பிரித்து நன்றிக்கடன் செலுத்தும்

இறைவனுக்கு காதலின் வலி தெரியுமா?



நீ எனக்காக அழ நான் உனக்காக அழ நமக்காக பாவம்

நாளெல்லாம் காதல் அழுகிறது கண்மணி!!!!!!

நாம் வாழ பிறந்தவர்களா? இல்லை அழ பிறந்தவர்களா?


(தோழியின் படைப்பு )

Sunday, March 1, 2009

மனைவி

உணவு கொடுக்கையில் உன் அன்னையாக!
விளையடுக்கையில் உன் தங்கையாக!
தோல்வியில் உனக்கு தோள் கொடுக்கும் உன் தோழியாக!
வெற்றியில் உன் புன்னகையாக!
மடியில் உன் குழந்தையாக!
மஞ்சனையில் உன் மனைவியாக!
உன்னை, உன் உயிரை, உன் நினைவை! மட்டுமே சுமந்து
உன் மஞ்சனையில் மட்டும் அல்ல, உன் நெஞ்சனைலும்
வாழவேண்டும்! ஏனென்றும்...
(தோழியின் படைப்பு)